சென்னையில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காவல் ஆணையர் தகவல்

சென்னையில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காவல் ஆணையர் தகவல்
X

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது அதிகரித்திருப்பதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72 சதவீதத்தில் இருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விபத்துகளில் 659 பேர் உயிரிழந்துள்ளனர். 3,325 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 26 சதவீதம் (173) பேரும், காயமடைந்தவர்களில் 37 சதவீதம் (1214) பேரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள். இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 74 சதவீதம் (126) பேரும் காயமடைந்த 86 சதவீதம் (1056) பேரும் தலைக்கவசம் அணியவில்லை.

இதைத்தொடர்ந்து தலைக்கவசம் அணிவதை வாகன ஓட்டிகள் எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் இருசக்கர வாகன ஓட்டிகளில் 72 சதவீதம் பேர் மட்டுமே தலைக்கவசம் அணிகிறார்கள் என்பது தெரியவந்தது. சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை 72 சதவீதத்தில் இருந்து 86 சதவீதமாக தற்போது அதிகரித்துள்ளது என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!