அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் 21ம் தேதி குறை தீர்வு முகாம்

அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் 21ம் தேதி குறை தீர்வு முகாம்
X

அண்ணாசாலை தலைமை அஞ்சலகம்

சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் 21ம் தேதி குறை தீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் வாயிலாக மணியார்டர், பதிவு தபால், சேமிப்பு வங்கி உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு அச்சேவைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் குறை தீர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இம்மாதம் 21ம் தேதி குறை தீர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம்.

தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை - 600 002 என்ற முகவரியில், 'குறைதீர்வு முகாம்' என்ற தலைப்பில் தபால் வாயிலாக, 18ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

வரும், 21ம் தேதி மாலை, 03.00 மணிக்கு நடைபெறும் குறை தீர்வு முகாமில், நேரிலும் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!