/* */

கிராமசபை புகார் தெரிவித்தால் ஊராட்சிதலைவர்,செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்

அனைத்து ஊராட்சி அலுவலங்களிலும் மூவர்ண கொடி ஏற்ற வேண்டும்.

HIGHLIGHTS

கிராமசபை புகார் தெரிவித்தால் ஊராட்சிதலைவர்,செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்
X


15.08.2022 சுதந்திர தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

1.) 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.

2.)அனைத்து ஊராட்சி அலுவலங்களிலும் மூவர்ண கொடி ஏற்ற வேண்டும்.

3.)ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.

4.) ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின் பற்றி கிராம சபை கூட்டம் நடந்த வேண்டும் மற்றும் கிராம சபைக் கூட்டம் நடைப்பெற உள்ள இடம் நேரம் ஆகியவை கிராம மக்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

5.)உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

6.) 2021-2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மற்றும் *கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் .

7.) 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உரிமை உண்டு

8.)18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் ஏற்றவும்.

9.)உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்கள்க்கு உரிமை உண்டு.

10.) கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

11.)ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

12.) ஏழு நாட்களுக்கு முன் கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

13.) தமிழக அரசு கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.

14.)மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை புகார் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்.

15.)கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டுகிறேன். முதலமைச்சர் உதவி மையத்தில் பொதுமக்கள் கிராம சபை புகார்கள் அதிகமாகவந்துள்ளது அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிராம சபை கூட்டம் இல்லை என்றால்உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு வள கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சர் உதவி மையம் - 1100

முதலமைச்சர் தனி பிரிவு - எண் - 044 25672345, 044 25672283

முதலமைச்சர் - எண்- +91 9443146857

தொலை நகல் - எண்- 044 25670930, 044 25671441

Updated On: 11 Aug 2022 3:30 PM GMT

Related News