/* */

சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.62.3 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.62.3 லட்சம் மதிப்பு 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.62.3 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்.

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அதில் வந்த சென்னையை சோ்ந்த ஒரு பெண் பயணி ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 தங்க செயின்களை கைப்பற்றினா்.

அதைப்போல் சாா்ஜாவிலிருந்து கல்ஃப் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகளை சோதனையிட்டனா். அவா்கள் வைத்திருந்த லேப்டாப் சாா்ஜா் மற்றும் ஆடைகளில் 10 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.

இலங்கையிலிருந்து வந்த பெண் பயணி மற்றும் சாாஜாவிலிருந்து வந்த 2 ஆண் பயணிகள் ஆகியோரிடமிருந்து 950 கிராம் தங்க செயின்கள், தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனா். அவைகளின் மதிப்பு ரூ.42.3 லட்சம்.இதையடுத்து 3 பயணிகளையும் சுங்கத்துறையினா் கைது செய்தனா்.

இந்நிலையில் துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனா். இதையடுத்து அந்த விமானம் உள்நாட்டு விமானமாக டில்லி செல்ல தயாரானது.விமான லோடா்கள் விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தினா்.

அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீா் தொட்டியில் கருப்பு பாலிதீன் பையில் சுத்தப்பட்ட ஒரு சிறிய பாா்சல் இருந்ததை கண்டுப்பிடித்து விமானநிலைய மேலாளரிடம் தெரிவித்தனா். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் வந்து பாா்சலை திறந்து பாா்த்து சோதனையிட்டனா். அதனுள் 4 தங்கக்கட்டிகள் இருந்தன.அதன் எடை 450 கிராம்.மதிப்பு ரூ.20 லட்சம்.இதையடுத்து விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை விமானநிலையத்தில் துபாய்,சாா்ஜா,இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து அடுத்தடுத்து வந்த 3 விமானங்களில் ரூ.62.3 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு,கடத்தல் பயணிகள் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On: 27 Dec 2021 3:39 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  2. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  4. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  8. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  10. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...