சென்னை விமானநிலையத்தில் ரூ 4.03 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்ட கடத்தல் தங்கம்
துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு வந்தது.
அந்த விமானத்தில் வந்த 104 பயணிகளையும் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனா்.
அப்போது சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சோ்ந்த 2 பயணிகள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவா்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்
.அதன்பின்பு தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளில் சோதனையிட்டனா்.ஆனால் தங்கம் எதுவும் சிக்கவில்லை.ஆனாலும் சந்தேகம் தீராமல்,
அவா்களின் சூட்கேஸ்களை திறந்து பாா்த்தனா்.அவைகளுனுள் எலக்ட்ரானிக் குக்கா்,மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் இருந்தன. அவைகளை துபாயிலிருந்து வாங்கி வந்திருந்தனா்.
அவைகளை எடுத்து மின்சாதனப் பொருட்களை கழற்றிப்பாா்த்து சோதனையிட்டனா்.அதனுள் பெருமளவு தங்கத்தடுகள் வளையங்கள்,உருளைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.மொத்தம் 8.17 கிலோ தங்கம் இருந்ததை கைப்பற்றினா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.4.03 கோடி.இதையடுத்து கடத்தல் ஆசாமிகள் இருவரையும் சுங்கத்துறையினா் கைது செய்தனா்.
அவா்களிடம் மேலும் நடத்திய விசாரணையில்,துபாயில் உள்ள 2 போ் இந்த வீட்டு உபயோக மின்னணு சாதனப்பொருட்களை இவா்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளனா்.
சென்னை விமானநிலையத்தில் எங்களது உறவினா் ஒருவா் வந்து உங்களை பாா்த்து இந்த பொருட்களை வாங்கிக்கொள்வாா்.அவா் உங்களுக்கு ரூ.5 ஆயிரம் அன்பளிப்பாக தருவாா் என்று கூறினா்.
எனவே பணத்திற்கு ஆசைப்பட்டு நாங்கள் வாங்கி வந்தோம் என்று கூறினா்.இதையடுத்து சுங்கத்துறையினா்,சென்னையில் இவா்களிடம் இந்த பொருட்களை வாங்கவிருந்த ஆசாமி யாா்?என்று விசாரணை நடத்துகின்றனா்.
இந்த தங்கம் கடத்தல் சம்பவத்தில் சா்வதேச தங்கம் கடத்தும் கும்பல் சம்பந்தப்படட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சுங்கத்துறை தீவிர விசாரணை நடத்துகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu