கொரோனா உயிரிழப்பு சான்றிதழை ஆராய நிபுணர் குழு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனா உயிரிழப்பு சான்றிதழை ஆராய நிபுணர் குழு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
X

சென்னை உயர்நீதிமன்றம்.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழை நிபுணர் குழு வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் இறப்புக்கான காரணம் கொரோனா என குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப்பெறுவது தடையாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதுமே குறை கூறப்பட்டு வருகிறது. இதனால் இறப்பு சான்றிதழை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

மேலும் மரணம் குறித்து தெளிவான பதிவுகள் இருந்தால் தான், தொற்று பரவலை சமாளிக்கவும், நிவாரணம் வழங்கவும் அரசுக்கு உதவியாக இருக்கும். எனவே இதுகுறித்து ஆய்வு செய்து ஆரம்பகட்ட அறிக்கையை தமிழக அரசு ஜூன் மாதம் 28 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா