சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டல வாரியாக குழு அமைத்து கண்காணிப்பு
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் மண்டலம் வாரியாக குழு அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் சென்னை அம்மா மாளிகளையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனைக்கு பிறகு காவல் ஆணையர் சங்கர் ஜிவால். கூறியதாவது: இன்றைய ஆலோசனையில் விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவு. மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அடங்கிய குழு என ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைக்கப்பட்டு அவர்கள் நாளை முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றார்
பின்னர் பேசிய ககன் தீப் சிங் கூறியதாவது: நாளை காலை முதல் காவல்துறையுடன் , மாநகராட்சி இணைந்து மூன்று வேளையும் அனைத்து மண்டலங்களிலலும் கண்காணிப்பில் ஈடுபடுவர். தேவை இல்லாமல் மக்கள் கூடினால் அபராதம் விதிக்கப்படும். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முன் அனுமதி வாங்க வேண்டும். 5 லட்சம் பேர் முதல் தவணை போடாமல் உள்ளனர். 8 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். நோய் தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் இவர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.இனிமேல் பொதுமக்கள் நலன் கருதி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அபரதங்கள் அதிகமாக வசூலிக்கப்படும்.நாளை கோயில்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்கள் அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu