நாடாளுமன்ற கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்திற்கு திமுக குரல் எழுப்பும்: எம்பி தயாநிதி மாறன்

நாடாளுமன்ற கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்திற்கு திமுக குரல் எழுப்பும்: எம்பி தயாநிதி மாறன்
X

ஆயிரம் விளக்கு தொகுதியில் எம்பி தயாநிதி மாறன் பேட்டியளித்தார். அருகில் அமைச்சர் சேகர்பாபு,

மேகதாது அணையை கட்ட விடாமல் தடுக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்புவோம் என்று எம்பி தயாநிதி மாறன் தெரிவித்தார்.

ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில் சீரமைக்கப்பட்ட சொக்கட்டான் சாலையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியதாவது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பல ஆண்டு காலமாக அமைக்க முடியாமலிருந்த சொக்கட்டான் சாலை திமுக ஆட்சி அமைந்ததும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஒரு நீதி கர்நாடகத்திற்கு ஒரு நீதியாக உள்ளது. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அவமதித்து வருகிறது.

மேகதாது அணையை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்றும் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் குரல் எழுப்புவோம் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

மேலும், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க விடாமல் தடுப்பதற்குதான் மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நல்ல முடிவை திமுக அரசு கொண்டு வரும் என தயாநிதி மாறன் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!