ரேஷன் பொருட்கள் வினியோகத்திற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்: தமிழகஅரசு அறிவிப்பு

ரேஷன் பொருட்கள் வினியோகத்திற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்: தமிழகஅரசு அறிவிப்பு
X

கோப்பு படம்

ரேஷனில் பொருட்கள் வாங்க, இன்று முதல் நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கிலும் அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த, தமிழக அரசு முழு ஊரடங்கு மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவும் பொருட்டு, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல், ரேஷன் கடைகளில் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கி, அதன் பின்னர் பொருட்கள் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, இன்று முதல் 4ம் தேதி வரை, ரேஷன் கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்படும். ஜூன் ௫ம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும். நிர்வாக காரணங்களால் துவரம் பருப்பு மட்டும், ஜூன் 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!