அனைத்து மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் முறையில் முடிவுகள்:அமைச்சர் சுப்பிரமணியன்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற புதிய பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலைய தொடக்க விழா நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
உத்தரகாண்ட் பிரதமர் நலநிதி மூலம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற புதிய பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலைய தொடக்க விழா நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், ராஜிவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தர்மபுரியை சேர்ந்த காவலர் கடந்த ஜனவரி மாதம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து முகம் சிதைவிற்று உயிருக்கு போராடும் நிலையில் சென்னை ராஜூவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திறமையான மருத்துவர்கள் சிகிச்சையால் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் 1222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை பிரதம மந்திரி திட்டத்தின் திறக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் 70 இடத்தில் திறக்கப்படுகிறது.70 ஆக்ஸிஜன் ஆலைகள் மூலம் 6490 படுக்கைகளுக்கு 10 லிட்டர் ஆக்ஸிஜன் கிடைக்கும்.
தமிழகத்தில் புதிதாக 850 இடங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும் 800 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது.
நாமக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், திருப்பூர் மருத்துவ கல்லூரியில் மத்திய மருத்துவ குழுவினர் கூறிய குறைகள் சரி செய்யப்பட்ட ஆவணங்களுடன் மருத்துவ கல்வி இயக்குனர் டெல்லி சென்றுள்ளார்.
திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆய்வு மேற்கொள்ள உடனடியாக மருத்துவ குழுவை அனுப்ப கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால் அரசு மருத்துவமனையில் பிலிம் நெகட்டிவ் பிரிண்ட் போட முடியாத நிலை இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் நெகட்டிவ் மூலம் கொடுக்காதற்கு நிதிச்சுமை காரணமல்ல என கூறிய அவர் டிஜிட்டல் உலகம் என்பதால் வாட்சாப் மூலம் சரியான முடிவுகள் மருத்துவர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்டுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் கூட எக்ஸ்ரே முடிவுகளை பிலிம் ரோல்களை வழங்குவதில்லை. தமிழக அரசை நிதிச்சுமையில் விட்டுச்சென்ற சென்ற முன்னாள் துணை முதலமைச்சர் உண்மை தன்மை தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளம் மற்றும் ஊடகத்தில் வரும் செய்திகளை மட்டும் நம்பி எந்தவித விவரங்களையும் அறியாமல் 10 ஆண்டு காலம் நிதிநிலை அறிக்கை சமர்பித்த ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுருப்பது தவறு என கூறிய அவர், ஓபிஎஸ் நிதியமைச்சராக இருந்தபோது மருத்துவத்துறைக்கு 19,420 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், தற்போதை திமுக ஆட்சியில் 18,933 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார்.
கடந்த ஆட்சியை விட ரூ.487 கோடி மருத்துவ துறைக்கு நிதி குறைத்து ஒதுக்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆனால் நிதியறிக்கை தலைப்பு வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் எந்த தலைப்பின் கீழும் நிதி குறைக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.
144 கோடி மினி கிளினிக்கு ஒதுக்கினீர்கள் என்றும் அதில் செவிலியர் சம்பளம் என்று கணக்கு காட்டினீர்கள். ஆனால் மினி கிளினிக்கில் செவிலியர் எங்கே என்றும் இல்லாத செவிலியருக்கு எப்படி ஊதியம் கொடுத்தீர்கள் என கேள்வியெழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து குளறுபடிகளையும் சரி செய்து வருகிறோம். பிபிஇ கிட், முககவசம், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவு உள்ளிட்டவற்றில் கூடுதலாக செலவு செய்து குளறுபடி நடைபெற்றுள்ளதை வெளிக்கொண்டுவந்துள்ளோம்.
சமூக வளைத்தளங்களில் வரும் செய்திகளை வைத்து ஓ.பன்னீர்செல்வம் அரசு மருத்துவமனைகள் மீது குறை கூறுவது நாகரீகமாக இல்லை. மருத்துவ துறைக்கு நிதி ஒதுக்கியதில் எவ்வித குறைபாடும் இல்லை குறைபாடுகள் இருந்தால் நேரடியாக விவாதிக்க தயார் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu