துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் -முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்திப்பு

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் -முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்திப்பு
X

துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (20-06-2021) தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினை சந்தித்தார். துணைநிலை ஆளுநர் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் முதல் முறையாக தமிழகம் வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். மேலும், கோதாவரி நதி நீர் இணைப்பு திட்டம், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் பற்றியும் முதல்வர் ஸ்டாலினுடன் பேசினேன். புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக எல்லைக்குள் ஒதுக்கி தர வேண்டுமென்று புதுச்சேரி மக்கள் சார்பாக கோரிக்கை வைத்தேன். இதன் மூலம் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த உதவியாக இருக்கும். அது தமிழகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்துள்ளது ஆறுதலைத் தருகிறது என்று தெரிவித்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்