முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியவர் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியவர் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பு
X

முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க கேரளாவை சேர்ந்த ஷர்மிளாவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் குறித்து ஷர்மிளா பதிவிட்ட பதிவுகளை நீக்க வேண்டும். விஜயபாஸ்கர் மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பி அளித்து விட்டு, மீதி பணத்தை தராமல் மிரட்டுவதாக ஷர்மிளா புகார் தெரிவித்தார்.இதனால், ஷர்மிளாவிற்கு எதிராக விஜயபாஸ்கர் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. விசாரணையின் முடிவில், விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க கேரளாவை சேர்ந்த ஷர்மிளாவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் சி.விஜயபாஸ்கர் குறித்து ஷர்மிளா பதிவிட்ட பதிவுகளை நீக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தவிர சி.விஜயபாஸ்கர் அமைச்சராக சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா பெருந்தோற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் விஜயபாஸ்கர், அவர் மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil