கொரோனா தடுப்பு பணி: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணி: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!
X

தலைமைச் செயலாளர் இறையன்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

தததமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்காக விதிக்கப்பட்ட இரண்டு வார ஊரடங்கி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தினார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், ஈரோடு, குமரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். அப்போது மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி நோயாளிகளுக்கு வழங்குவது, கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future