கொரோனா தடுப்பு நடவடிக்கை: மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ குழுவினருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதி அளவு குறைந்துள்ளது. ஆனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாளைமுதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலாக உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!