கொரோனா இறப்பு சான்றிதழ் உறுதி செய்ய வேண்டும், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா இறப்பு சான்றிதழ் உறுதி செய்ய வேண்டும், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை உயர் நீதி மன்றம் ( பைல் படம்)

கொரோனாவால் இறப்போரின் குடும்பத்தினர் நிவாரணம் பெறுவதற்கான உரிய இறப்பு சான்றிதழ் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களுக்கு, கொரோனாவால் பலியானார் என சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், கொரோனாவுக்கு பலியானவர்களுக்கு உரிய முறையில் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனாவால் பலியானவர்களுக்கு, கொரோனா காரணமாக பலியானதைக் குறிப்பிட்டு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil