கொரோனா 3ம்அலையை தடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் யோசனை!

கொரோனா 3ம்அலையை தடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் யோசனை!
X
வலுவான கட்டமைப்போடு கொரானா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும்-முன்னாள் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பரிசோதனைகளை அதிகமாக எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம், நிறைய மருத்துவ மனைகள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனை மையங்கள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளோம். வீட்டு கண்காணிப்பை பொறுத்தவரை கிராமப்புறத்தில் கூடுதலாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வெளியே வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மிக வலுவான கட்டமைப்போடு,ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரானா மூன்றாம் அலையை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!