+2 மதிப்பெண் தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

+2 மதிப்பெண் தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்
X

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தபோது.

பிளஸ் 2 மதிப்பெண்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்பது அனைத்துக் கட்சிகளின் கருத்து அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. ஆன்லைன் வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளது. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!