கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை! நலத்திட்ட உதவி!!

கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை! நலத்திட்ட உதவி!!
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய காட்சி.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைக் கருணாநிதி நினைவிடத்தில் மரக்கன்று நட்டு வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைத்தார். இதையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திலும் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இல்லத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். ஏழை எளியோருக்குத் தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், கல்வி உதவித் தொகை, திருநங்கைகளுக்கு உதவித் தொகை, மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!