/* */

சென்னை மழை நீர், வெள்ளம் குறித்து விசாரணை கமிஷன் அமைப்பது வீண்

சென்னை மழை நீர் வெள்ளம் குறித்து விசாரணை கமிஷன் அமைப்பது வீண் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சென்னை மழை நீர், வெள்ளம் குறித்து விசாரணை கமிஷன் அமைப்பது வீண்
X

சென்னை மாநகராட்சியில் நடந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

சென்னை மாநகராட்சி அம்மா மாளிகை அரங்கில் உள்ளாட்சி தேர்தளுக்கான வாக்கு சாவடி பட்டியலை இறுதி செய்வது குறித்து அனைத்து அரசியல் கட்சி பிராதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார்.

கடந்த 4ஆம் தேதி மாநகராட்சி சார்பில் வரைவு வாக்கு சாவடி பட்டியல் வெளியிட்டப்பட்ட நிலையில் அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தம் மற்றும் இறுதி செய்வது குறித்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா,பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன்,காங்கிரஸ் சார்பில் தமோதிரன், மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களின் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் :-

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் பேடி மற்றும் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சிறப்பாக கையாண்டனர் என்றார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை மழை நீர் வெள்ளம் குறித்து விசாரணை கமிஷன் அமைப்பது கிணற்றில் போடும் கல் போன்றது என்றும் எதற்கு விசாரணை கமிஷன் என்று கேள்வி எழுப்பினார்.

சென்னையில் திமுக எம்எல்ஏ க்கள் தான் உள்ளனர்.தொகுதி வாரியாக எம்எல்ஏ பரிந்துரையில் தான் வேலைகள் நடைபெற்றது என்றும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு தேவையான அதிகாரிகளைக் கொண்டு தான் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டனர் என்றார்.

மேலும்,இதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றால் எவ்வளவு ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. தற்போது அந்த அதிகாரிகள் எந்த நிலையில் பணி செய்கின்றனர் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக வெளிப்படையாக கூற வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,

ஆணையம் அமைத்து காலம் தாழ்த்துவது விட குற்றம் நடந்திருந்தால் சிபிசிஐடி விசாரணை அமைப்பதில் ஏன் என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பியதோடு முன்னாள் ஊராட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது திட்டமிட்டே அரசியல் நோக்கத்திற்காக அவதூறு பரப்பப்படுகிறது. உண்மையில் குற்றம் நடந்திருந்தால் சிபிசிஐடி விசாரணை நடத்தட்டும் என்றார்.

காங்கிரஸ் பிரமுகர் தாமோதரன் பேட்டி*

மழை வெள்ளப்பாதிப்புகளை சிறப்பாக கையாண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்.பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரே பூத்தில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளோம்.

அதேநேரத்தில், வார்டு மறுவரையறை குறித்து நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் கேட்டுள்ளார்.கட்சி தலைவர் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து பதிலளிப்பதாக கூறியுள்ளோம் என்றார்.

Updated On: 15 Nov 2021 7:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?