சென்னை: மாற்றுத்திறனாளிகள், முதியோர் அறக்கட்டளை கொரோனா நிவாரண நிதி!

சென்னை: மாற்றுத்திறனாளிகள், முதியோர் அறக்கட்டளை கொரோனா நிவாரண நிதி!
X

மாற்றுத்திறனாளிகள், முதியோர் அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண நிதியை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் வழங்கியபோது.

சென்னை மாற்றுத்திறனாளிகள், முதியோர் அறக்கட்டளை சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அதிக அளவில் பொருட் செலவு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரணத்துக்கு முடிந்த நிதியை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி தொழில் அதிபர்கள், நிறுவனங்கள், ஊழியர்கள், சங்கங்கள், அறக்கட்டளை என பல தரப்பில் இருந்து கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அகில இந்திய அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் முதியோர் அறக்கட்டளை சார்பில் திருத்தணியை சேர்ந்த அதன் தலைவர், எஸ்.எஸ்.ஜோதி ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலிடம் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!