சென்னை மக்களுக்கு நற்செய்தி: கொரோனா தொற்று குறைந்தது..! சுகாதாரத்துறை செயலர் தகவல்

சென்னை மக்களுக்கு நற்செய்தி: கொரோனா தொற்று குறைந்தது..! சுகாதாரத்துறை செயலர் தகவல்
X

தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: ஆய்வகங்களில் கூடுதலாக பாசிட்டிவ் என வந்தால் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.நெல்லை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த முறை பொது மக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்த முறை கூடுதலாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் பாதிப்பை வேகமாக குறைக்க முடியும்.

மேலும் கொரோனா தடுப்பூசிகள் கூடுதலாக வேண்டும் என மத்திய அரசிடம் கேட்கப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!