அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ரூ.50 லட்சம் நிவாரணம்: மு.க ஸ்டாலினிடம் வழங்கினர்

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ரூ.50 லட்சம் நிவாரணம்: மு.க ஸ்டாலினிடம் வழங்கினர்
X

 கொரோனா பொது நிவாரண நிதிக்கு அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ரூ. 50 லட்சத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியபோது.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவபத்மநாதன் மற்றும் இணை இயக்குநர் அனுராதா குமார் ஆகியோர், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!