சட்டமன்ற தேர்தல் செலவு ரூ.744 கோடி : தமிழக அரசு அரசாணை வெளியீடு
தலைமை செயலகம் (பைல் படம்)
சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக ரூ.744 கோடி செலவானதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகின. வாக்குப் பதிவு மையத்தை தயார் செய்வது, வாக்கு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதியம் என தேர்தல் பணிகளுக்கு பல கோடி ரூபாய் செலவானது. மேலும் கூடுதலாக கோரிய ரூ.126 கோடியில் ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் செலவிற்காக 617.75 கோடி ரூபாய் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், தொலைபேசி, எரிபொருள், வாகனத்திற்கான வாடகை, விளம்பரம் உள்ளிட்டவற்றுக்காக 126.18 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கூடுதலாக கோரிய 126 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தப்படாத பில்களுக்காக மேலும் 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu