/* */

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

All womens police stations were opened by Chief Minister Stalin

HIGHLIGHTS

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்  முதலமைச்சர் ஸ்டாலின்  திறந்து வைத்தார்
X

காவல்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காவல்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (16.6.2022) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் கலைஞரால் 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன் முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர்.

சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் காவல் துறையினர் திறம்பட செயலாற்றி வருகின்றனர். தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வளசரவாக்கம், தாம்பரம் மாநகரம் – சேலையூர், ஆவடி மாநகரம் – எஸ்.ஆர்.எம்.சி, தாம்பரம் மாநகரம் – வண்டலூர், வேலூர் மாவட்டம் – காட்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் – திருவண்ணாமலை ஊரகம், கடலூர் மாவட்டம் – திட்டக்குடி, கரூர் மாவட்டம் – கரூர் ஊரகம், புதுக்கோட்டை மாவட்டம் – கோட்டைபட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம் – மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் – பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் – ஊமச்சிக்குளம், திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் ஊரகம், தேனி மாவட்டம் – பெரியகுளம், இராமநாதபுரம் மாவட்டம் – முதுகுளத்தூர், திருநெல்வேலி மாவட்டம் – சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் – புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!