/* */

காவல்துறையைக் கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

HIGHLIGHTS

காவல்துறையைக் கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள்  வெளிநடப்பு
X

திமுக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டமன்றத்தில் இருந்து பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தன்

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:கலைவாணர் அரங்கில் இன்று தமிழக அரசின் 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது 505 மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி திமுக ஆட்சிக்கு வந்தததுர .தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தான் போடும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் என்று தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் முதல்வர் கூறினார்.

ஆனால் ,ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் இதற்கு எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை.மேலும் நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் நீட் தேர்வுக்கு நன்கு படித்து தயாராகுங்கள் என்று மாணவர்களுக்கு தெளிவான அறிவுரையும் வழங்காமல், மாணவ சமுதாயத்தினரிடையே பெரிய குழப்பத்தை, இந்த விடியாத அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்திற்கு ஆளானார்கள். எனவே நீட் தேர்வு ரத்துக்கு தீர்வு காணாததை கண்டித்தும்.மாநிலத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்றறிக்கையை நிதி அமைச்சர் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

பேட்டியின் போது 14-ஆவது நிதிக்குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வருவாயில் ரூ.75,000 கோடி இழப்பு என்றும், ரூ.25,000 கோடி திட்ட நிதி, முறையான பயனாளிகளுக்கு செல்லவில்லை என்றும் ஒரு தவறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை அறிக்கை ஒரு விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான். ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நல திட்ட உதவிகள் அனைத்துமே அரிசி குடும்ப அட்டைகளின் அடிப்படையிலேயே நடைபெறும். 2006-2011 திமுக அரசு வழங்கிய கலர் டிவி, அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போருக்குத்தான் வழங்கப்பட்டது.

இதே முறைதான் அம்மா அரசிலும் பின்பற்றப்பட்டது. எனவே 2006 ஆண்டில் திமுக அரசே இந்த தவறை செய்தது என்கிறார்களா? மேலும், இது தவறு எனில் திமுக அரசு தற்போது வழங்கிய கொரோனா நிதியில்,விரும்பிய மாற்றத்தை செய்திருக்கலாமே. எனவே ஊதாரித்தனமான செலவு செய்த முன்னாள் அரசு என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனம் செய்த நிதி அமைச்சர் கண்டித்தும்,

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுக சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுவதை கடுமையாக கண்டிக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவுள்ள சூழ்நிலையில் இப்படி பொய் வழக்கு போட்டு கழக தொண்டர்களின் வேகத்திற்கு தடைபோட திமுக பகல் கனவு கான வேண்டாம்.

இதுபோன்ற பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். எனவே உண்மைக்கு புறம்பாக வழக்குகளை போட்டு, பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசை கண்டித்தும், நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கிய திமுக அரசு. மேலும், சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் கடந்த அரசு ஊதாரித்தனமான அரசு என்று பேசிய நிதி அமைச்சருக்கு கண்டனம். தெரிவித்தும் அ தி மு க வெளி நடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Updated On: 13 Aug 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு