சென்னை, கோவை அதிமுக ஐடி பிரிவு மண்டலங்கள் மாற்றம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

சென்னை, கோவை அதிமுக ஐடி பிரிவு மண்டலங்கள் மாற்றம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!
X
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாக வசதி கருதி, கோவை, சென்னை மண்டலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஓபிஎஸ்- ஈபிஎஸ் நியமித்துள்ளனர்.

அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் நிர்வாக வசதி கருதி, ஏற்கெனவே செயல்பட்டு வரும் சென்னை, கோவை மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்கள் இன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக, ஓபிஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை: சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் அஸ்பயர் கே.சுவாமிநாதன், தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னைவிடுவிக்குமாறு வைத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் விடுவிக்கப்படுகிறார். சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பில் அதிமுக செய்தித் தொடர்பாளர் எம்.கோவை சத்யன் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.

மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக வசதிக்காக சென்னை, கோவை மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்கள் இன்று முதல் பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டு செயல்படும். சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள்: வட சென்னை வடக்கு (கிழக்கு மற்றும் மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு மற்றும் மேற்கு), தென் சென்னை வடக்கு (கிழக்கு மற்றும் மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு மற்றும் மேற்கு), சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு, திருவள்ளூர் (வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு) என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள், கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடுபுறநகர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்கிழக்கு மற்றும் மேற்கு, கடலூர் கிழக்கு, மத்தியம் மற்றும் மேற்கு என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story