அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கட்சியிலிருந்து விலகல்

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கட்சியிலிருந்து விலகல்
X

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், அதிமுகவில் நல்ல தொழில்முறையாளர்கள் மற்றும் திறமையாளர்களுக்கு இனியும் மதிப்பு இல்லை. எதிர் காலம் குறித்து சிந்தனை, எதை நோக்கி போகிறோம் என்ற இலக்கு எதுவுமே இல்லாமல் கட்சி இருப்பது இன்னும் மோசம். என்னை கட்சி பதவியிலிருந்து நீக்கிவிடுமாறு, கடந்த வாரமே, தலைமைக்கு சொல்லிவிட்டேன். இப்போது நான், அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிடுகிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!