அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
X
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க கோரியும், தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்காவிடில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!