அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் நீக்கம் இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் நீக்கம் இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு
X

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னாள் எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கினர். ( பைல் படம்)

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர், முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன், அரியலூர் மாவட்ட முன்னாள் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ இளவழகன் ஆகியோர், கட்சியின் குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும்,

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
microsoft ai business school certificate