ஈரானில் சிக்கித்தவித்த 6 மீனவா்கள், விமானத்தில் சென்னைக்கு வந்தனர்
ஈரானில் சிக்கி தவித்த மீனவர்கள் மீட்க பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். ( பைல் படம்)
தமிழகத்தின் கடலூர்,தஞ்சாவூர், கன்னியாகுமரி, விழுப்புரம் மற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 6 தமிழக மீனவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்த யாஷின் என்பவரது விசைப்படகில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு மாதங்களாக படகில் போதிய மீன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த படகின் உரிமையாளருக்கும் மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக மீனவர்கள் உண்ண உணவும்,தங்குவதற்கு இடமும் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் உதவி கேட்டதன் அடிப்படையில் சென்னையில் உள்ள தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு 6 தமிழக மீனவர்களையும் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததனர்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த வா்கீஸ்,விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சோ்ந்த ஆறுமுகம்,கடலூரை சோ்ந்த ஏழுமலை,தஞ்சாவூரை சோ்ந்த சதீஷ்,செல்லதுரை,கேரளா மாநிலத்தை சோ்ந்த ஜஸ்டீன் ஆகிய 6 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு தோகாவிலிருந்து வந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தனா்
.சென்னை விமான நிலையத்தில் அவா்களை அதிகாரிகள் வரவேற்று, அவர்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu