அதிமுக ஐ.டி பிரிவில் சிறந்த, மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் பரிசு, தலைமை அறிவிப்பு

அதிமுக ஐ.டி பிரிவில் சிறந்த, மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் பரிசு,  தலைமை அறிவிப்பு
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி. (பைல் படம்)

ஐ.டி பிரிவில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் வழங்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டுதல்படி, எதிர்பார்ப்புகளை விஞ்சும் அளவிற்கு பணியாற்றும் தலைசிறந்த மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

மேலும், சிறந்து விளங்கும் பணியாளர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சமும், இரண்டாவது பரிசாக 1.5 லட்சமும், மூன்றாவது பரிசாக 1 லட்சமும் வழங்கப்படும் என்றும் இந்த பரிசுத்தொகை கழக ஒங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future