பத்து ஆண்டுகளில் 20கிலோ தங்கம், 26 கிலோ வெள்ளி உண்டியல் காணிக்ககை
பார்த்த சாரதி திருக்கோயில் பைல் படம்
திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் கடந்த பத்து ஆண்டுகளாக 20 கிலோ தங்கம், 26 கிலோ வெள்ளி உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சட்டபேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவித்தபடி கடந்த பத்து ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து,
அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் 2005ல் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 8 கிலோ 217 கிராம் பலமாற்று பொன் இனங்களும், 2016ல் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 10 கிலோ 96 கிராம் பலமாற்று பொன் இனங்களும், 15.09.2021 முடிய 2 கிலோ 487 கிராம் 300 மி.கி. பலமாற்று பொன் இனங்களும், ஆகமொத்தம் 20 கிலோ 800 கிராம் 300 மி.கி. பொன் இனங்கள் உண்டியலில் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்றுள்ளன.
மேலும், வெள்ளி இனங்கள் 2016ல் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 17 கிலோ 413 கிராம் பலமாற்று வெள்ளி இனங்களும், 15.09.2021 முடிய 9 கிலோ 301 கிராம் 760 மி.கி. பலமாற்று வெள்ளி இனங்கள் ஆகமொத்தம் 26 கிலோ 714 கிராம் 760 மி.கி. வெள்ளி இனங்கள் உண்டியல் மற்றும் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்றுள்ளன. இவ்வாறு கோயில் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu