அம்மா உணவகத்தில் உணவு தரத்தை ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்..!

அம்மா உணவகத்தில் உணவு தரத்தை ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்..!
X

அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த போது.

சென்னை: அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

திருவல்லிக்கேணி காட்டுக்கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் என்று ஆய்வு மேற்கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தயார் செய்யப்பட்டிருந்த உணவினை சாப்பிட்டு ருசி பார்த்தார். பின்பு உணவு தயாரிக்க இருப்பு வைக்கப்பட்டிருக்கும் பொருள்களையும் அது வைக்கப்பட்டிருந்த அறைகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர், அப்பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து அப்பகுதி மக்களுக்கு ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!