சென்னை: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் ரியல் எஸ்டேட் குழுவினர்!

சென்னை: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் ரியல் எஸ்டேட் குழுவினர்!
X

ரியல் எஸ்டேட் குழு சார்பில் ஏழைகள்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உணவுகளை வழங்குகிறார்.

சென்னையில் வாழ்வாதார்ம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு ரியல் எஸ்டேட் குழுவினர் உணவளித்து வருகின்றனர்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசியக் குழு சார்பில், கொரோனா காலத்தில், சென்னையில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஏழை, எளிய, மக்களின் பசிப்பிணியை போக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 25-ஆம் நாள் உணவு வழங்கும் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறுவனர் - தேசிய தலைவர் ஆ.ஹென்றி தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 500 பேருக்கு முகக் கவசம் மற்றும் பிரியாணி வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் தேசியக் குழு பொறுப்பாளர்கள் சந்திரசேகர், ராஜசேகர், ஜெயச்சந்திரன், ஜவஹர், பிரசன்ன குமார், செல்வம், தமிழரசன், கண்ணன், கார்த்திக், பொன்குமார், மொய்தீன், ஆற்காடு தம் பிரியாணி ரமேஷ், மாரி, ரேஸ் கார்த்திக், பிரபாகர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#Chennai #realestate #team #feeds #people #suffering #without #livelihood #சென்னை #வாழ்வாதாரம்இன்றி #தவிக்கும் #மக்களுக்கு #உணவளிக்கும் #ரியல்எஸ்டேட் #குழுவினர் #Instanews #lockdown #covid #corona #fund

Tags

Next Story
ai marketing future