சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திட்ட உதவியாளர் பணி நியமனத்தில் குளறுபடி

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திட்ட உதவியாளர் பணி நியமனத்தில் குளறுபடி
X
சி.எம்.டி.ஏ.,வில் பணி விதி குளறுபடி காரணமாக, 17 திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சி.எம்.டி.ஏ.,வில் பணி விதி குளறுபடி காரணமாக, 17 திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் தற்போதைய நிலவரப்படி, 17 உதவி திட்ட அதிகாரிகள், 72 திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த பணியிடங்களை நேரடி தேர்வு வாயிலாக நிரப்ப, கடந்த ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.ஆனால், பணி விதிகளில் காணப்படும் சில குளறுபடிகளால் இந்நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. தற்போது பொறுப்புக்கு வந்துள்ள புதிய அதிகாரிகள், காலியிடங்களை நிரப்ப முன்வந்துள்ளனர். ஆனால், கல்வித்தகுதி தொடர்பாக பணி விதிகளில் குழப்பம் நிலவுவதால் நேரடி தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சி.எம்.டி.ஏ.,வில், 2006க்கு பின் உதவி திட்ட அதிகாரி பணியிடங்கள் பதவி உயர்வு வாயிலாக மட்டுமே நிரப்பப்படுகிறது. நேரடி தேர்வு நடத்த வேண்டுமானால், நகரமைப்பு பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது பட்டயம் முடித்தவர்கள் வர வேண்டும் அல்லது பி.இ., பட்டத்துடன் ஐந்தாண்டு நகரமைப்பு பணி அனுபவம் உள்ளவர்கள் வரலாம்.இதில் நகரமைப்பு பட்டம், பட்டயம் பெறுவோர் குறைவு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பி.இ., படித்தவர்களின் பெயர்கள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றனர். இவர்களின் நகரமைப்பு பணி அனுபவத்தை சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது உள்ள திட்ட உதவியாளர்களில் பலர் நகரமைப்பு பட்டம் பெறாதவர்கள் என்பதால், பதவி உயர்வு வழங்குவதற்கும் சிக்கல் ஏற்படுகிறது.இது தொடர்ந்தால், துணை திட்ட அதிகாரி இடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்படும்.இதனால், அடுத்த சில ஆண்டுகளில் சி.எம்.டி.ஏ., நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு தலையிட்டு இதற்கு தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story