தமிழ்நாட்டில் வெப்பசலனத்தின் காரணமாக எங்கெல்லாம் மழை பெய்யும்

தமிழ்நாட்டில் வெப்பசலனத்தின் காரணமாக எங்கெல்லாம் மழை பெய்யும்
X

சென்னை வானிலை மையம் அறிக்கை (பைல் படம்)

தமிழ்நாட்டில் வெப்பசலனம் காரணமாக எங்கெல்லாம் மழை பொழியும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பசலனத்தின் காரணமாக

28.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

01.07.2021, 02.07.2021: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

பூந்தமல்லீ (திருவள்ளூர்) 7, கொடநாடு (நீலகிரி) 6, கொரட்டூர் (திருவள்ளூர் ) 5, கொடுமுடி (ஈரோடு) 4, சென்னை விமான நிலையம், ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அவிநாசி (திருப்பூர்) மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 3, சென்னை நுங்கம்பாக்கம், நடுவட்டம் (நீலகிரி), முசிறி (திருச்சிராப்பள்ளி) தலா 2, ஊத்துக்குளி (திருப்பூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

அரபிக்கடல் பகுதிகள்:

28.06.2021 முதல் 02.07.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!