ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு
X

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அதிமுக கட்சி விதியின் படி பொதுச்செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் இந்த விதியை திருத்த முடியாது. பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவை தலைவர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம்; அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோர் ஜூலை 7-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!