சென்னை கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
சென்னையில் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன்,மோகன் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோஷியேஷன் செயலாளர் ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவ.வி மெய்யநாதன் கூறியதாவது :
கிக் பாக்ஸிங் ஒரு தற்காப்பு கலை. பள்ளிகளில் இந்த விளையாட்டு இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.பெண் குழந்தைகள் பள்ளிகளில் பயிற்சி பெரும்போது தங்களை தற்காத்துக்கொள்ள முக்கியத்துவம் தருகிறது கிக் பாக்ஸிங் என்றார்.
அமெச்சூர் கிக் பாக்ஸிங் போட்டிக்கு அரசினுடைய அங்கீகாரத்தை பெற சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வாய்ப்பு இருப்பின் இந்த விளையாட்டு அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu