டாஸ்மாக் போராட்டத்திற்கு இனி அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

டாஸ்மாக் போராட்டத்திற்கு இனி அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்
X
டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு என்றாலும் அதற்கு எதிராகப் போராடவும் மக்களுக்கு உரிமை உண்டு –உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்க அப்பகுதி பெண்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மதுக்கடை மீது கல் வீசியதாக 10 பெண்கள் உள்பட பலர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுவோர் அதற்கு எதிராகப் போராட உரிமை உண்டு. டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு என்றாலும் அதற்கு எதிராகப் போராடவும் மக்களுக்கு உரிமை உண்டு' என்று கருத்துத் தெரிவித்துள்ள நீதிபதி, டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?