சென்னை கோயம்பேடு பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை கோயம்பேடு பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்
X

சென்னை கோயம்பேடு பேருந்து  நிலையம் எதிரே கட்டப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ள மேம்பாலம்

சென்னை கோயம்பேட்டில் புதிதாக கட்டிய பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை கோயம்பேட்டில் புதிதாக கட்டிய பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பார அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக அரசு குறிப்பாக 2017 -க்கு பின்பு சென்னை மாநகரில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மிகப்பெரிய உயர்மட்ட பாலம் 100 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு ஒப்புதல் தரப்பட்டு 95 சதவீத பணிகள் 2020 டிசம்பர் மாதத்தில் முடிவுற்று இருந்தன. தற்போது பாலப் பணிகள் 99.99% முடிவுற்ற நிலையில் பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத காரணத்தால் தினம்தோறும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர்.

மேலும் இதுபோன்ற தொடர் விடுமுறை பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக பேருந்துகளை உடனுக்குடன் தேவைப்படும் மாவட்டங்களுக்கு இயக்குவதை கண்காணிக்க அதிமுக அரசின் அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் நேரில் வருகை தந்து கண்காணித்தனர். தற்போதுள்ள அரசு அவ்வாறு செயல்படவில்லை. அதேபோல் குறிப்பாக சென்னையில் அதிமுக அரசால் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்த வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் வேளச்சேரி இரண்டடுக்கு பாலத்தின் முடிந்த பகுதியையும் 146 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேடவாக்கம் மேம்பாலம் வேளச்சேரி - தாம்பரம் பகுதியையும் உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!