டிரான்ஸ்பார்மரில் கார் மோதி கார் ஓட்டி வந்தவர் பலி

டிரான்ஸ்பார்மரில் கார் மோதி கார் ஓட்டி வந்தவர் பலி
X

டிரான்ஸபார்மரில் மோதி தீ பிடித்த காரை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க போராடும் தீ அணைப்பு வீரர்கள்.

டிரான்ஸ்பார்மரில் கார் மோதியதில் தீப்பிடித்து கார் ஓட்டி வந்தவர் பலியானார்.

மின்சார டிரான்ஸ்பார்மரில் கார் மோதி தீ விபத்து. கார் ஓட்டி வந்த 35-வயதான பள்ளிகாரணை பகுதியை சேர்ந்தவர் தீயில் கருகி பரிதாபமாக பலி.

சென்னை பள்ளிகாரணை விஜிபி சாந்தி நகரில் மின்சார டிரான்ஸ்பார்மரில் கார் மோதிய விபத்தில் கார் தீபற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. காரை ஓட்டி வந்த (பள்ளிகாரணை) அதே பகுதியை சேர்ந்த காஜா நஜுமுதீன்(35) விபத்துக்குள்ளானதும் காரை விட்டு கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் காரில் ஏரி காரை ஆன் செய்தது பின்னால் எடுக்க முயன்றபோது கார் தீப்பிடிக்க துவங்கியது. காரை விட்டு வெளியேற முடியாத சூழலில் காரில் சிக்கிய காஜா நஜுமுதீன் மீது தீ முழுவதும் பரவியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏற்பட்ட தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. காரில் சிக்கிய காஜா நஜுமுதீன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபற்றி எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்துள்ளனர்.

மேலும் காரில் இருந்தவரின் குடும்பத்தினர்க்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவைக்கப்பட்டு தீயில் கருகியவர் காஜா நஜுமுதீன்தானா என்பதை பள்ளிகாரணை போலீசார் உறுதி செய்தனர்.

தடவியல் நிபுணர் உதவி இயக்குநர் சோப்பியா ஜோசப் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் தடையங்களை சேகரித்து சென்றார். மேலும் இரு துண்டாக உடைந்த டிரான்ஸ்மார்மரை மாற்றும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!