சென்னை: கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

சென்னை: கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
X

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னையில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாநகர தேர்தல் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான பிரகாஷ், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையில், இதுவரை 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு கோவி ஷீல்டு தடுப்பூசியும், மீதமுள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி ஒன்றுக்கு 15 எண்ணிக்கையிலான முழு உடல் கவச உடைகள், முகக்கவசங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்படும். இதை கண்காணிக்கவும், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையிலும் வாக்குச்சாவடிக்கு இருவர் என மொத்தம் 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!