தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
X
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம்.

தென்மேற்கு பருவ காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

28.09.2021: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29.09.2021,: கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30.09.2021: வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

01.10.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

களியல் (கன்னியாகுமரி) 17, குழித்துறை (கன்னியாகுமரி) 15, சூரலக்கோடு (கன்னியாகுமரி) 14, தக்கலை (கன்னியாகுமரி) 13, கன்னியாகுமரி, நாகர்கோயில் (கன்னியாகுமரி) தலா 12, மைலாடி (கன்னியாகுமரி) 11, கொட்டாரம் (கன்னியாகுமரி) 9, பொன்னமராவதி (புதுக்கோட்டை) 8, கன்னிமார் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 7, பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 6, வால்பாறை (கோவை), ஏற்காடு (சேலம்), குடுமியான்மலை (புதுக்கோட்டை) தலா 5, பெரியாறு (தேனி) 4, அன்னவாசல் (புதுக்கோட்டை), கடவனுர் (கள்ளக்குறிச்சி) தலா 3, பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), ஆயிக்குடி (தென்காசி), புலிப்பட்டி (மதுரை) தலா 2, அருப்புக்கோட்டை (விருதுநகர்), பாபநாசம் (திருநெல்வேலி ) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!