புதிதாக கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் செல்போன் திருட்டு

புதிதாக கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் செல்போன் திருட்டு
X

பைல் படம்.

சென்னையில் புதிதாக கல்லூரியில் சேர வந்த மாணவரிடம் கோயம்பேட்டில் செல்போனை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்கள்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எட். பட்டப்படிப்பில் சேர்வதற்காக சொந்த ஊரில் இருந்து பஸ்சில் நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார்.

பின்னர் கோயம்பேட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல மாநகரப் பேருந்தில் ஏறும்போது, பையில் வைத்திருந்த செல்போனை மர்மநபர் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.

Tags

Next Story
the future with ai