கோயில்களில் தலையிடும் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு: சுப்ரமணிய சுவாமி

கோயில்களில் தலையிடும் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு: சுப்ரமணிய சுவாமி
X

பைல் படம்

கோயில்களில் தலையிடும் தமிழக அரசுக்கு எதிராக இந்த மாத இறுதியில் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வேன் என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும், தேவைபட்டால் உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

சுப்ரமணிய சுவாமியின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் எதையும் எதிர்கொள்ள தயார் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக ரிட் மனுவை தாக்கல் செய்யப்போவதாக சுப்ரமணிய சுவாமி மீண்டும் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 51 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. எனினும், வழக்குகள் காரணமாக அதை நிறைவேற்ற முடியாமல் இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோவில்களில் 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற, சட்டத்தின் படி கடந்த மாதம் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil