இ மெயில் மூலம் கொரோனா மையம் தொடங்கலாம் - ஆணையர் பிரகாஷ்

இ மெயில் மூலம் கொரோனா மையம் தொடங்கலாம்   - ஆணையர் பிரகாஷ்
X
சென்னை மாநகராட்சிக்கு இ&மெயில் அனுப்பிவிட்டு கொரோனா சிகிச்சை மையம் துவங்கலம் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகரில் நேற்று மட்டும் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும் என அவசியம் இல்லை. விண்ணப்பம் தேவையில்லை. மாநகராட்சி அலுவலக அதிகாரிக்கு இ மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு சிகிச்சை மையம் தொடங்கலாம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!