கமீலா நாசர் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

கமீலா நாசர் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
X

மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியில் நாசரின் மனைவி கமீலா நாசர் அடிப்படை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் பொது செயலாளர் சந்தோஷ் பாபு நாசரின் மனைவி கமீலா நாசரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கமீலா நாசர் சென்னை மண்டல கட்டமைப்பு மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்