முழு ஊரடங்கின் போது பேருந்துகள் இயங்காது : அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் , சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து நேரில் பார்த்தறிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது :
பயணிகள் எந்த பிரச்சனையும் இன்றி பயணிக்க , டிக்கெட் கிடைக்கவில்லை என வருந்தாத அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ம் தேதி முதல் 12,865 பேருந்துகளில் 5.74 லட்சத்துக்கு மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். பயணியர் கூட்டம் அதிகரித்தால் பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
பேருந்துகளில் பயணிக்க 89 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்தனர். தீபாவளியை விட பேருந்து நிலையங்களில் அதிகம் கூட்டம் காணப்படுகிறது.
75 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவதால் , ஒரு சில பேருந்துகளில் மட்டுமே பயணிகள் நின்று பயணிக்கும் நிலை இருக்கிறது.
ஒமிக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்குள் காணாமல் போய் விடுகிறது , குளிர் காலத்தில் கொரோனா அதிகமாகத்தான் இருக்கும் .
பேருந்து வழித்தட உணவகங்களில் தரமற்ற நிலையிலும் , விலை அதிகமாகவும் உணவு வழங்கப்படாததாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
போதுமான அளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்பதால் அதிகமானோர் ஆம்னியில் பயணிக்கவில்லை. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மதுரைக்கு 465 ரூபாய்க்கு அரசு பேருந்து இயக்கப்படும்போது , 3மடங்கு அதிகம் விலை கொடுத்து ஏன் ஆம்னி பேருந்தில் செல்ல வேண்டும்? எனவே பொதுமக்கள் அதிகம்பேர் ஆம்னியில் செல்ல ஆர்வம் காட்டவில்லை.
ஞாயிறு முழு ஊரடங்கு நாளில் பேருந்து இயக்கப்படாது. பொங்கல் முடிந்து திரும்புவோருக்கு 17 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்கப்படும்.
ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் , சனிக்கிழமை இரவு முறையாக பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து சேரலாம் " என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu