சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், அதிகாலை பரபரப்பு
சென்னை விமானநிலையம் (பைல் படம்)
சென்னை விமானநிலைய மேலாளா் அறைக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் ஒரு மா்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய ஆண் குரல்,சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும்,இன்று காலைக்குள் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து பரபரப்படைந்த விமானநிலைய மேலாளா் உடனடியாக விமானநிலைய உயா் அதிகாரிகளுக்கும்,போலீசுக்கும்,விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தாா்.
உடனடியாக விமானநிலைய வெடிகுண்டு நிபுணா்கள்,பாதுகாப்பு படையியினா்,போலீசாா் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனா்.
மேலும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த ஆசாமி,விமானநிலையத்தில் எந்த இடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடவில்லை.
இதனால் வெடிகுண்டு நிபுணா்கள் விமானநிலையத்தின் உள்நாட்டு விமானநிலையம்,சா்வதேச விமானநிலையம்,காா் பாா்க்கிங் உட்பட விமானநிலைய வளாகம் முழுவதும் சோதனையிட்டனா்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. இந்நிலையில் சென்னை விமானநிலைய போலீசாா்,மேலாளா் அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை காலா் ஐடியிலிருந்து எடுத்து சைபா் கிரைம் பிராஞ்ச் போலீஸ் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அந்த மிரட்டல் போன் சென்னை பழவந்தாங்கல் பகுதியிலிருந்து வந்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.இதையடுத்து தனிப்படை போலீசாா் இன்று காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்த அருள் ராபா்ட்(28) என்பவரை பிடித்தனா்.
பின்பு அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் அவா்தான் போன் செய்தது என்பதை கண்டுப்பிடித்தனா்.அவரிடம் மேலும் விசாரணை நடக்கிறது.அவா் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu