சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பன்னீர் சோடா குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்தி
பைல் படம்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் லட்சுமணன்(6). இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். லட்சுமணனும், இவரது உறவினர் மகன் ஓமேஸ்வரனும், (8) சேர்ந்து, வீட்டிற்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில், 'பிளாஸ்டிக்' பாட்டிலில் உள்ள பன்னீர் சோடாவை வாங்கிக் குடித்துள்ளனர்.
உடனே லட்சுமணனும், ஓமேஸ்வரனும் ரத்த வாந்தி எடுத்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு லட்சுமணன், ஓமேஸ்வரன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் பன்னீர் சோடா விற்பனை செய்த பெட்டிக்கடையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu